அன்பை தேடுகிறாள்

ஓடி ஓடி காதலித்தவன் ஓடும்
இடம் தெரியாமல் ஓரம் கட்டப்பட்டான் - நேசித்தவளாள் !
உற்று நோக்கி விலகி சென்றவள் வீதியில் கதறுகிறாள் - பாதியில் வந்தவனால் !
வசதி பார்த்தவள் கண்கள் கட்டிக் கொண்டு உயிராய் காதலித்தவனுக்கு மரண கடிதம் அனுப்பினால் !
இன்று அவள் நம்பி சென்றவனால் அவள் தினமும் மரண படியில் உறங்குகிறாள் அவள் இழந்தையெண்ணி - பழைய காதலை .
அன்பும் அக்கறையும் பணத்தால் வாங்கப்படுபவை
அல்ல
உள்ளத்தாலும் உணர்வுகளாலும் வழங்கப்படுபவை.
படைப்பு
ரவிசுரேந்திரன்