ஆஃப்பாயில் காதல்

தாயை கண்ட சேயை போலவே தாவி வருகுதே
என் மனம்
உன்னிடம்.

தாலாட்டிட நீ வேண்டாம் தலைசாய்த்திட உன் மடி போதும்.
திட்டம் ஏதும் இல்லை ஆனால் வட்டமடிக்கிறேன் உன்னை.
சத்தமிட்டு சொல்கிறேன் எனக்குள் மௌனம் சாதிக்கும் உன் பெயரை.

என் பக்கம் மட்டும் காதல் வேக - அதை
நீ காணது வேகமாய் போக
ஒருதலை காதலாய்
அரை வேக்காடு முட்டையாய்
என் காதல் உன்னருகே நிற்க

ஒருமுறையேனும் திரும்பி பார்ப்பாயா என் உயிர் பிரிவதற்குள்.

சுட்டித்தோழி சுபகலா

எழுதியவர் : சுட்டித்தோழி சுபகலா (20-Sep-18, 12:48 am)
பார்வை : 1265

மேலே