விதி சதி

விதியாம், சதியாம்...

என்னங்க பாட்டிம்மா 'விதி, சதி'ன்னு பொலம்பிட்டு இருக்கிறீங்க?

வாடி மலர்க்கொடி. நான் என்னத்தச் சொல்லுவேன். அஞ்சு வருசத்துக்கு முன்னாடி எம் பேரன் பொன்னையனும் அவன் மனைவி பொன்மணியும் அமெரிக்கா போனாங்க. அங்க மொத பிரசவத்திலேயே பொன்மணிக்கு ரட்டைக் குழந்தைங்க பொறாங்க. ரண்டு பெண் கொழந்தைங்க. நேத்துத்தான் பொன்னையன் குடும்பத்தோட வந்தான்.

ரொம்ப சந்தோசம் பாட்டிம்மா. இப்ப
எதுக்கு 'விதி, சதி'ன்னு பொலம்பினீங்க.

என்னத்தச் சொல்ல? ஒரு பொண்ணுப் பேரு 'விதி'யாம். இன்னொரு பொண்ணுப் பேரு 'சதி'யாம். பெத்த பிள்ளைங்களுக்கு 'விதி, சதி'ன்னா பேருங்கள வைக்கிறது. அநியாயம்டி, அநியாயம். கொழங்கைங்க என்ன பாவம் செஞ்சதுங்க.

நமக்கு என்னங்க பாட்டிம்மா தெரியும்? இந்திப் பேருங்களா இருக்கும்.

என்ன இருந்தாலும் இது மாதிரியெல்லாமா பேரு வைக்கிறது?
■■■■■■■■■◆■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
Sati = chaste woman
Vithi = pathway.

எழுதியவர் : மலர் (23-Sep-18, 6:15 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 112

சிறந்த நகைச்சுவைகள்

மேலே