தமிழை புறக்கணிக்கிறேன்
தமிழை புறக்கணிக்கிறேன்
தளத்தோரே!
கோபம் கொள்ளாதீர்
கொந்தளிக்காதீர்
வசை பாடாதீர்
வழக்குறைக்காதீர்
தரங்கெட்ட மகன்
இத்தளத்தில் எதற்கென்று
கரம் உயர்த்தாதீர்
சற்றே கீழ் வரை சென்று பின்
மேல்முறையீடு செய்யுங்கள்
தாய்மொழியோ தமிழ்
தற்போது வாய்மொழியோ இந்தி
தத்தெடுத்த என் செல்வத்தின்
பிறந்தநாள் சான்றிதழோ தமிழில்
தாய் தகப்பன் பெயரோ வேறு
ஒருக்கால் தமிழ் கற்று பின்
சான்றிதழ் படித்து
என்னை பிரிவாளோ என்ற
பயத்தோடு ஒளித்து வைப்பதிலே
என்காலமும் ஓடுகிறது
ஒப்பற்றோரே உயர்ந்த உங்கள் கரங்கள்
தாழ்வதை காண்கிறேன்

