மகாத்மா காந்தி

மகாத்மா....
மகிமை பொருந்திய
ஆத்மா -நீங்கள்!

விடுதலை வேட்கை கொண்டு
வீறுநடை
போட்டவர்-நீங்கள்!

உப்புச்சத்தியாக்கிரகமும்
உண்ணாவிரதப் போராட்டமும்
நடத்திய
உத்தமர்-நீங்கள்!

ஆயுதமேந்திய
ஆங்கிலேயரை எதிர்த்து
அறவழிப்போராட்டம் நடத்திய
அண்ணலர்-நீங்கள்!

புத்திலிபாய்க்குப் பிறந்த
புத்திசாலி-நீங்கள்..
பொல்லூன்றிய
புரட்சியாளர்-நீங்கள்!


மேலமாசியில்-ஏழைகளுக்காய்
மேலாடை களைந்தீர்....
இந்திய மக்களுக்கு-முழுஆடை
வேண்டுமெனறு
சூளுரைத்தீர்...

ஆயுள் முழுவதும்
அறப்பணிக்காய்
அர்ப்பணித்தவர்-நீங்கள்...
அகிம்சைக்கோர்
அர்த்தம் தந்தீர்கள்...

காந்தி-உங்களால்தான்
இந்தியா அடைந்தது
சுதந்திரச்சாந்தி....

எழுதியவர் : Jaleela Muzammil (25-Sep-18, 10:42 am)
சேர்த்தது : Jaleela
பார்வை : 5193

மேலே