மோனா லிசாவும் பொறாமை கொண்டாள்

பூமலர் புன்னகைக்கு
பொய்கள் தேடினேன்
பொய்யும் சோர்ந்தது
கையும் சோர்ந்தது !
தூரிகை எடுத்தேன்
தீட்டினேன்
புன்னகை சத்தியமானது
நித்தியமானது !
மோனா லிசாவும்
பொறாமை கொண்டாள் !

எழுதியவர் : கவின் சாரலன் (28-Sep-18, 9:08 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 77

மேலே