புத்தகமோ பூவோ

முத்துக்கள் நீந்தித் தவழ்ந்திடும் தேனோடை
முத்தமிழ்ச் சொற்கள் தவழும் தமிழோடை
சித்திரம் போல்சிவந்த செவ்விதழ்கள் செவ்வானப்
புத்தகமோ பூவோநீ சொல்

எழுதியவர் : கவின் சாரலன் (28-Sep-18, 8:52 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 71

மேலே