காந்தி தேசமே காவல் இல்லையா

காந்தி தேசமே காவல்
இன்றிப் போனதே /
அகிம்சை போராட்டாம்
புறம்பாகிப் போனதே /

புரட்சிப் படை
வளர்ச்சி காணுதே /
நீதியெல்லாம் தரம்
கெட்டுப் போனதே /

அநீதியெல்லாம்
தரத்தோடு உலாவுதே /
உரிமையெல்லாம்
பறிக்கப் படுகின்றதே /

உண்மையெல்லாம்
மறைக்கப் படுகிறதே /
காவல் துறையும்
கலங்கப்பட்டுப் போனதே /

ஊழல் ஓங்குகின்றதே /
உழவுத் துறைக்குள்ளும்
அவை தங்கி விட்டதே /
காந்தி தேசம் நாசமாகிப் போனதே /

ஐயா கலாமின் ஆசையும்
நசுங்குண்டு பட்டுப் போனதே/
ஒற்றுமையும் இழந்து போனதே /
மதப் பிரிவு இனப் பிரிவு (பேய்) மண்டையிலே நின்று ஆடுதே /

சுதந்திர தேசம்
கூவம் போல் நாறுதே /
துன்பங்கள் பரவுகின்றதே /
துயரங்கள் தொடர்கின்றதே /
ஏழைக்கு விடிவு இல்லமல் போனதே /

எடுத்துரைப்பவனின் உயிருக்கு உத்தரவாதம் இன்றி (ப்) போனாதே /
உத்தமன் எத்தனையோ ஆண்ட பூமி /
கூக்குரல் ஓசையிலே சுற்றுகிறதே/
ஆட்சி தரம் கெட்டுப் போனதுமே /
காந்தி தேசத்தின் பெயரும் கெட்டுப் போனதே/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (5-Oct-18, 8:01 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 447

மேலே