கவிதை
நல்ல கவிதை இது என்று
எழுதும் கவிதைகளை
பார்ப்பாரோ கேட்பாரோ
இல்லை-புரியா வரிகளை
நிரப்பி புது கவிதை
இது என்று எழுதிவிட
கொடிகட்டி பறக்குதே
கவிதை , கிறுக்கி விட்ட
வண்ணம், 'மாடர்ன் ஆர்ட்'
ஆகி 'ஆக்ஷனில்' ஓஹோன்னு
போவது போல்.