குலோத்துங்க சோழன் கோவை - நூல் - ஒன்பதாவது - பாங்கிமதியுடன்பாடு - குறையுறவுணர்தல்- பாடல் 85

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

அஃதாவது - மூன்றாநாள் தோழனாற்கூடுங் கூட்டம்; அது: சாரிதல் கேட்டல் சாற்றல் எதிர்மறை நேர்தல் கூடல் பாங்கிற் கூட்டலென ஏழுவகைப்படும்; அவ்வேழுந் தலைவன் பாங்கனைச் சார்தல் முதல் பாங்கிற் கூட்டலீறாகிய இருபத்துநான்கு விரிகளையுடையன; அவை வருமாறு:-

தலைவன் பாங்கனைச் சார்தல்.

பாங்கன் தலைவனை யுற்றது வினாவல்

தலைவ னுற்ற துரைத்தல்.

கற்றறி பாங்கன் கழறல்.

கிழவோன் கழற்றெதிர் மறுத்தல்.

பாங்கன் கிழவோற் பழித்தல்.

கிழவோன் வேட்கை தாங்கற்கருமை சாற்றல்.

(இ-ள்) தலைவன் பாங்கனைநோக்கி நீ பழிக்கின்ற என்னுள்ளந் தேறுதற்கு வேட்கை யென்னாற் றாங்கமுடியாதென்று கூறுதல்.

இதுவுமது.

பாங்கன் றன்மனத்தழுங்கல்.

ஒன்பதாவது - பாங்கிமதி யுடன்பாடு.

அஃதாவது--தலைவி வேறுபாட்டைப் புணர்ச்சியுண்மை யறிந்தாராய்ந்து தோழி தன்மதியை யுடன்படுத்தல்; அது: முன்னுறவுணர்தல், குறையுறவுணர்தல், இருவருமுளவழி யவன்வரவுணர்தலென மூன்றுவகைப்படும்;

அவற்றுள் - முன்னுறவுணர்தலாவது தலைவனைப் புணர்ந்து மீண்டுவந்து தன் முன்னுற்ற தலைவியின் வேறுபாட்டைப் பாங்கி கண்டு அதனானே கூட்ட முண்மையறிதல்;

அது: வகையின் வகையாய் ஐயமுற்றோர்தல், ஐயந்தீர்தல், பல்வேறு கவர்பொருட் சொல்லி நாடல் என மூன்றாம்;

அவற்றுள்- ஐயமுற்றோர்தல் பலவகைப்படும்; அவை வருமாறு:-

நாற்றங்கண்டு ஐயுறல்.

தோற்றங்கண்டு ஐயுறல்.

ஒழுக்கங்கண்டு ஐயுறல்.

உண்டிகண்டு ஐயுறல்.

செய்வினை மறைப்புக்கண்டு ஐயுறல்.

செலவுகண்டு ஐயுறல்.

பயில்வுகண்டு ஐயுறல்.

பிறைதொழு கென்றல்.

ஐயங்கரந்து தையலை வினாவுதல்.

கரந்துரை.

சுனைவியந்து உரைத்தல்.

(இ-ள்) தலைவியங்ஙனங்கூறப்பின்னும் விடாதவளாய்ப் பாங்கி தலைவியுள்ள நிகழ்ச்சியை வெளிப்படுத்தச் சுனையை வியந்து சொல்லுதல். சுனை - நீர்நிலை.

இதுவுமது.

நாண நாட்டம்.

தகையணங்குறுத்தல்.

நடுங்க நாட்டம்.

குறையுறவுணர்தல்.

அஃதாவது-தலைவன் தழைமுதலியவற்றைக் கொண்டு தன்பாற் குறையுற்று நிற்பக்கண்டு பாங்கி அதனானே கூட்டமுண்டென்றறிதல்; அது: தேர்தல் தெளிதலென இருவகைப்படும். தேர்தல்-ஆராய்ச்சி செய்தல். அவைவருமாறு:-

பெட்டவாயில் பெற்றிரவு வலியுறுத்தல்.

ஊர்வினாதல்.

பேர்வினாதல்.

(இ-ள்) வெளி.

கட்டளைக் கலித்துறை

திருவோ விரதிகொ லோசசி யோதெய்வ மோகினித
னுருவோவந் நாளுங்கள் பேரறி யேனுயர் வாண(ர்)கீகைந்
தருவோ வெனுங்கைக் குமார குலோத்துங்கன் றஞ்சைவெற்பின்
மருவோதி யீருமக் கிந்நாளெப் பேர்சொல்லும் வாய்மலர்ந்தே! 85

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (28-Nov-24, 3:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 9

மேலே