கேட்குதே அவன் கீதம்
மதுராபுரியில் சுற்றுலா பயணியாய் நான்
ஓரிடத்தில் அழகிய தோகை மயில் கண்டேன்
வானில் மேகம் தோகை சிலிர்த்திய மயில்
தோகை விரித்து ஆடி வந்தது இப்போது
அருகில் மூங்கில் புதர் ஒன்று கண்டேன்
தென்றலும் வந்து மூங்கிலைத் தடவ
காற்றினிலே வந்தது புல்லாங்குழல் கீதம்
என் முன்னே மாயவன் கண்ணன் காணவில்லை
காணவில்லை அவன் மாயன், ஆனால்
கேட்குதே அவன் வேய்ங்குழல் கீதம்
கண்டுகொண்டேன் நான் அதில் அவனை..