கடல் மடியில்

கடல் மடியில் - உயிர் வாடும்

நுரை தவழும் கடல் அலைகள்
தரை மீது மோதும்
மணல் தரையில் சிறு நண்டு
மறைந்து விளையாடும்
இருள் அகற்றும் சூரியன்
அந்தப்புறம் போகும்
எம் வாழ்வினிலே விடியல்
எப்ப வந்து சேரும்

நான் படகெடுத்து போகையிலே
பாவி உயிர் போகும்
இரவினிலே கடல் மடியில்
தனிமையில் உயிர் வாடும்
வழி அனுப்பியவள் காத்திருப்பாள்
கடவுளின் துணையோடு
நான் கடல் கிழித்து வரும்போதே
அவள் கண்களில் உயிர் சேரும்

எழுதியவர் : kovaitamizchi (21-Aug-11, 11:10 pm)
Tanglish : kadal madiyil
பார்வை : 2000

மேலே