அந்த ஓவியம்

" யோவ்! அந்த ஓவியம் அழகா வசீகரமா இருக்குனு தான கேட்குறேன். ஏன்யா தரமாட்டீங்கிறீர்கள்?
இருமடங்கு விலை தருகிறேன். எனக்கு கொடுயா. ", என்றார் ஓவியங்களின் பிரியர் வண்ணதாசர்.

" அந்த ஓவியம் பற்றி தெரிந்தால் இப்படி பேரம் பேசமாட்டீங்கய்யா. கொடுக்க முடியாது. ",என்றார் ஓவியக் கடைக்காரர் கறாராக.

" ஏன்யா!? வழக்கமாக உன் கடையில் தானய்யா பல ஓவியங்கள் வாங்கியிருக்கிறேன்.
இந்த ஓவியத்தை மட்டும் தர மாட்டேன் என்றால் என்ன அர்த்தம்? ", என்று சண்டைக்கு வந்தார் வண்ணதாசர்.

" சனியனை விலைக்குத் வாங்குவேன் என்பது உங்க விருப்பமானால் அதை யாரால் தடுக்க முடியும். ", என்று முணுமுணுத்தவாறே பணத்தை வாங்கிக் கொண்டு ஓவியத்தை பேக்கீங் செய்து கொடுத்தார் கடைக்காரன்.

அதோடு, " இந்த ஓவியத்தை திருப்பிக் கொண்டு வந்தால் வாங்க மாட்டேன். ",என்று நிபந்தனையும் விதித்தார்.
ஒப்புக் கொண்ட வண்ணதாசர் வெற்றி களிப்படைந்து ஓவியத்தோடு தன் காரில் வீடு திரும்பினார்.

வீடு வந்த வண்ணதாசர் தன் மனைவி காயத்ரியிடம் அந்த ஓவியத்தைக் காட்டினார்.
" மாசம் மாசம் ஒன்னாந் தேதியான போதுமே, ஒரு ஓவியத்தை வாங்கி வந்து விடுகிறீர்கள்.
வீடெல்லாம் ஓவியமாகவே இருக்கு, ", என்று சளித்துக் கொண்ட காய்த்ரி, இந்த ஓவியத்தைக் கண்டதும், " ரொம்ப அழகாயிருக்கிறதே! இன்னைக்குத் தான் உருப்படியான ஓவியம் வாங்கி வந்திருக்கிறீங்க. மிகவும் தத்ரூபமாக உள்ளதே!. ",என்று புகழ்ந்து தள்ளினார்.

அந்த ஓவியத்தை வைப்பதற்கான பிரத்யேகமான இடத்தை அவரே தேர்வு செய்தார்.
ஓவியம் அழகாக மாட்டிவைக்கப்பட்டது.

வண்ணதாசர் ஒரு தொழிலதிபர். அவர் ஓவியங்களை சேகரிப்பதில் விருப்பமுடையவர்.
அவர் மனைவி
காயத்ரி. வீட்டில் எல்லா வேலைகளையும் கவனித்துக் கொள்பவர்.
அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான்.
அவன் பெயர் செல்வன்.
அவன் வேறு ஊரில் தனது மனைவி லட்சுமியுடன் வசித்து வந்தான்.

அன்றைய தினம் வீடு கலகலப்பாக இருந்தது.
ஏனெனில் விடுமுறையை கழிக்க செல்வன் தன் மனைவியோடு வண்ணதாசர் வீட்டிற்கு வந்திருந்தான்.

அங்கு விசித்திரமான அந்த ஓவியத்தைக் கண்ட செல்வன் அதை வரைந்த ஓவியர் யார் எனத் தெரிந்துகொள்ள விரும்பினான்.
தன் தந்தையிடம் கேட்டான். அவருக்கு தெரியவில்லை.

தனது கைபேசியில் அந்த ஓவியத்தை படம் பிடித்துக் கொண்டு, அந்த ஓவியம் வாங்கப்பட்ட கடைக்கு செல்ல தனது காரில் புறப்பட்டான்.
ரொம்ப நேரமாக அந்த காரை ஓட்டிக் கொண்டிருந்தார்.
அந்த ஓவியக்கடை வந்தபாடில்லை.

காரை இயக்கியவாறே அந்த இடத்தைச் சுற்றிக் கவனித்தான்.
அவன் மீண்டும் மீண்டும் அந்த பகுதியிலே சுற்றிக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.

திடீரென கார் இன்ஜின் இயக்கம் நின்றுவிட்டது.
மீண்டும் இயக்கி பார்க்க கார் இயங்கவில்லை.

உதவிக்கு யாரையாவது அழைக்கலாம் என்று தொலைபேசியை எடுத்து பார்த்தான்.

திடீரென போன் ரிங் ஆனது. செல்வன்
எடுத்துப் பார்த்தான்.
அவனுடைய மனைவிதான் அழைக்கிறாள்.

அட்டன்ட் செய்து, " ஹலோ! ",என்றிட, " என்னங்க இவ்வளவு நேரமாக என்ன பண்றீங்க?
அந்த ஓவியத்தை வரைந்தவர் பற்றி தெரிந்து கொண்டீர்களா? ", என்று லட்சுமி கேட்டுக் கொண்டிருக்கும் போதே
" டேய்! ஒழுங்க வேற வேலை இருந்தால் போய் பாரு.
வீணான விடயங்களை அறிய முயலாதே. ",என்று கைபேசியில் மற்றொரு குரல் கேட்டது.

அதிர்ந்தே போனான் செல்வன்.

" ஏங்க என்ன ஆச்சு?
பேசுங்க! ",என்று லட்சுமி கேட்க, " உனக்கெதுவும் கேட்கலையா? ", என்றான் செல்வன்.

" இல்லையே! எதுவும் கேட்கலையே! ", என்றாள் லட்சுமி.

" சரி நீ போனை வை. நான் வாரேன். ",என்று போனைக் கட் செய்துவிட்டு, வீட்டிற்கு போகவேண்டுமென காரை இயக்கினார்.
இப்போது கார் இயங்கியது.

நேராக வீட்டிற்கு வந்தான்.
வந்தவன் முகம் பேய் அறைநதார் போல் இருக்க, " என்னவாயிற்று? ",என்று வீட்டில் உள்ளவர்கள் கேட்க,
நடந்தவற்றை செல்வன் சொன்னான்.

வண்ணதாசர் சிந்தித்தார்.
இதற்காகத் தான் அந்தக் கடைக்காரன் கொடுக்க மாறுத்தானோ?
என்று நினைந்தார்.

தற்போது அந்த ஒவியத்தைப் பார்த்தார். அவருக்கே அருவருப்பாகத் தோன்றியது.
இருந்தாலும் அந்த ஓவியத்தைக் கடைக்காரனிடம் திருப்பிக் கொடுக்க முடியாது. வேறென்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினார்.

ஏழு நாட்கள் கழிந்தன.
அந்த ஓவியம் இருக்கும் இடம் சுற்றிலும் பாசம் பிடித்தாற் போல் இரத்தம் படர்ந்து கொண்டே வந்தது.

ஒவியத்தில் இருந்த அழகான பெண் முகம் அகோரமாக மாறியது.
அந்த ஓவியத்தை அகற்றப் பயமாக இருந்தது.
வண்ணதாசர் தன் இல்லத்தைவிட்டு வெளியேற முடிவு செய்து, தன் மகன் மனைவி மற்றும் மருமகளோடு அங்கிருந்து கிளம்பி தன் மகன் இல்லம் செல்ல, கார் இடையே தடைப்பட்டு நின்றது.

செல்வன் தன் மொபைலில் இருந்த ஓவியத்தை நீங்கி அந்த கைபேசியையும் உடைத்தான்.
பிறகு கார் இயங்கியது.
பயணம் தடையின்றி தன் மகனின் இல்லத்தை அடைந்தார்.

அங்கு தன் குடும்பத்தோடு சந்தோஷமாக வாழத் தொடங்கினார்.
கைபேசியில் இந்த ஓவியம் இணையத்தில் எப்படியோ பதிவேறிவிட்டது.

வண்ணதாசரின் பழைய வீடு இருந்த இடம் விற்கப்பட்டதால் அந்தவீடு இடிக்கப்பட்டு இந்த இடத்தில் பெரிய ஜாப்பிங் மால் கட்டப்பட்டது.
பெரிய நகர உருவானது.

இணையத்தில் பதிவேறி அந்த ஓவியம் பல பேரை மாயையில் சிக்க வைத்து கொண்டிருந்தது.

முதலில் அழகாகத் தோன்றுவதும், பின் அகோரமாகிவிடுவதும், அது இஷடத்திற்கு நம் சிந்தையும் ஆட்டி படைப்பதும் என ரொம்ப அட்டகாசம் செய்கிறது பூர்விகமில்லா அந்த ஓவியம்.

இந்த கதைகூட அந்த ஓவியம் உருவாக்கிய மாயை தான்.

ஆனால் இந்த மாயைக் கதை சொல்லும் நீதி
" உங்கள் வாழ்க்கையில் எதையும் புறத்தோற்ற அழகைக் கண்டு மயங்கி நம்பி ஏமாறாதீர்கள். ",என்பதே...
நன்றி சகோதர, சகோதரிகளே.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (11-Oct-18, 9:04 pm)
Tanglish : antha oviyam
பார்வை : 298

மேலே