நீ பிறந்த நாளில்

என் தங்கை..
பாடாய் என்னைப் படுத்த-என்
பெற்றோர் தந்த
ஒரு பூனைக்குட்டி...-இன்று
வளர்ந்தக் குட்டி...

நாளை அவள் பிறந்தநாள்...
வேலைக்கு விடுப்புக் கூறி
துணிக்கடையில்
இன்று நான்...
சென்ற வருடம்
நான்
சேலை வாங்கித்தர
அதை அவள்
கட்டச் செய்ய
என் அம்மா
பட்ட பாடு
நினைவிலிருப்பதால்
அவள்
பிசாசாய் விரும்பும்
கடல்நீல நிறத்தில்
சுரிதார்
ஒன்று வாங்க...

அப்பாடா...
கிடைத்துவிட்டது...
இதையவள் உடுத்தினால்
பல மலர்களுக்கு இனி
'பந்த்' தான்...

வேறென்ன...
.
.
ஆ..
மல்லிகைப்பூ...
அதை
அம்மாவையே வாங்கிச்
சூடச்சொல்வாள்...
.
.
அப்புறம்..
கேசரி...
அதுவும் அம்மாதான்...
.
.
வேற...
..
ஆ...
கார்நேட்டோ ஐஸ்கிரீம்..
அதை
அப்பாவைத்தான்
வாங்கச் சொல்வாள்...-அவர்
மடியில்தான்
சாப்பிடச் செய்வாள்...
.
.
வீட்டிற்கு வந்துவிட்டேன்...
.
.
சாய்நாற்காலியில்
சாய்ந்தபடி
அப்பா...

உள்ளிருந்து வருகிறது
அம்மாவின் குரல்....
.
.
'சிவா..
வந்துட்டியாடா..
இங்க வந்து
அவ 'படத்த’ எடுத்துக்குடுடா..
தொடச்சுப் பொட்டு வைக்கணும்'....
.
.
.
.

.
.
.
.
.

எழுதியவர் : முகவை சௌந்தர ராசன் (17-Oct-18, 9:10 pm)
Tanglish : nee pirantha nalil
பார்வை : 5363

மேலே