மாலை நேரத்துப் பயணமும் பயமும்

செவ்வானை இருள் கவ்வும் பொழுது
ஆடம்பரத்திற்காக கண்ணடிக்கும் மின்விளக்குகள்
இரைச்சல் கலந்த இசை
அடுத்தவர் அலைபேசியை மொய்க்கும் கண்கள்
கன்னியரை கொத்தும் கழுகுப் பார்வைகள் சிலவும்

கன்னியருக்காக தென்றலோடு போட்டியிடும் சிலரும்

இவர்களைப் போல் அல்லாது
தங்கை பாதுகாப்பிற்காக அன்புள்ளம் கொண்ட அண்ணன்
அவனோடு பயணம் பாதுகாப்பு என்பதுடன்

தங்கையின் உளமகிழ்ச்சி சொல்லவியலா உவகை பூக்கிறதே!

எழுதியவர் : ப.அமுதா (17-Oct-18, 6:44 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 67

மேலே