வேறு சில நாட்களில்

பெருத்த ஓசையும் தேயத்தேய
மனதில் விரையும் வாகனம்.
சேட்டை செய்யும் தெய்வங்கள்.
எந்த சந்திலும்
எதிர்ப்படும் கடன்காரன்.
வெட்கவெட்கமாய் ஓடும்
பெண்கள் கல்லூரி பேருந்து.
காமம் கொதிக்க நரைபுருவத்துடன்
கோவில் பிச்சைக்காரன்.
ஓடி ஓடி அலையும்
மூட்டுவலி அறியாத நாய்.
பேப்பர் பொறுக்கும்
பச்சிலை வைத்தியர்.
சிறுநீர் கழியும் சிறுவனை
வெறிக்கும் முதிர்கன்னி.
யாரோ குப்பையில் எறிந்த
மாக்கியவெல்லி புகைப்படம்.
புகைபுகையாய் ஊதும்
கலைக்டர் ஆபிஸ் கிளார்க்.
கோவில் மேடு கடந்து
பள்ளிவாசல் கடக்கும் ஆடுகள்.
இந்திய பம்மாத்துகளுக்கு
எனது ஊரும் ஒரு பலிகடா.

எழுதியவர் : ஸ்பரிசன் (17-Oct-18, 6:11 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
Tanglish : veru sila natkalil
பார்வை : 57

மேலே