கன்னத்தில் கைவைத்து என்னதான் சிந்தனையோ
குழலினில் மல்லிகை குவிந்த இதழ்களில் புன்னகை
கன்னத்தில் கைவைத்து அவனைப் பற்றிய சிந்தனையோ
குங்குமப் பொட்டிட்டு குத்து விளக்காய்ச் சிரிப்பவளே
காலையில் அழகின் பூபாளம் பாடும் மங்கலவீணையே !
குழலினில் மல்லிகை மெல்லிதழில் புன்னகை
கன்னத்தில் கைவைத்து என்னதான் சிந்தனையோ
குங்குமமிட் டுச்சிரிக்கும் குத்துவிளக் கேபூவே
மங்கலப்பெண் நல்வீணை யே !
-----வீணை இன்னிசை வெண்பாவில்
கவிப்பிரிய அஷ்ரப் அலி அழகிய படத்துடன் தந்திருந்த இனிய கவிதையில்
நான் எழுதிய கவிதையின் இரு வடிவம் இங்கே உங்களுக்காக .