நதியின் நளினம்
கவிதை ஒரு நீரோட்டம்
எங்கிருந்தும் ஓடி வருகின்ற நதிபோல்
கவிஞனின்
எண்ணங்களும் கவிதையாய் நம்மை தேடி வருகின்றது
அழகிய நதியின் நளினம் நங்கையின் வடிவில்
கவியின் ஆழம் கவிஞனின் எண்ண கருவில்
குழந்தையென உருவாகி ஊட்டம்மிக்க
வரிகள் கொண்டு வந்து பிறக்கின்றது கவியதையென
கன்னியின் அழகையும் காளையின் திமிரையும்
கடைந்தெடுத்து காதலும் கனிய வைக்கும்
எண்ண கனிகளை எளியதொரு கவி செடியில் சிக்க வைத்து
இயன்றவரை ரசித்து நிற்க வடிவமைப்பவன் கவிஞன்
கவி புனைய கன்னியும் காளையும் கவிஞன் மனதில்
ஊறிடும் இன்ப சேற்றில் அன்பு வடம் பூண்டு
அணைத்து நிற்க கவிஞன் உள்ளத்தில்
அன்பு வரி ஆசை வரி எழுத்துக்களாய் ததும்பி நிற்க
எடுத்தியம்ப வார்த்தைகளும் எழுதி வைக்க எழுத்துக்களும்
கவிதைகளாய் கட்டமைந்து கவிஞன் பெயர்
சொல்லித்தான் சொக்கவைக்கும்
கடவுள் படைப்பில் கவிஞனும் படைப்பாளியே