மன்னிப்பாயா
கவிதைமணி தந்த தலைப்பு
"மன்னிப்பாயா?"
ஆபிரகாம் வேளாங்கண்ணி "கண்டம்பாக்கத்தான்"
எழுதிய கவிதை
கவிதைமணி : நன்றி
°°°°°°°°°°°°°°°°°
பொன்னால் இதயமில்லை உனது
மரப்பாச்சி இதயமில்லை எனது
நீ தூக்கிப் போட்டு விளையாடிட
உந்தன் அனுமதி யின்றி உன்னை
நினைத்தது என் தவறே என்னை
மனமிறங்கி மன்னித்து விடும்
நினைத்து விட்டதை அழித்துவிட
எடுக்க க்கூடாத முயற்சிகளை
எடுத்தும் அழிக்க முடியவில்லை
சாயத்தில் முங்கிய நூலைப்போல்
ஏறிய சாயம் மறைய மறுக்கிறது
ஒரே வழி தீயிட்டு எரிப்பது தான்
அதையும் செய்கிறேன் உனக்காக
மீடூவின் அச்சத்தில் கேட்கிறேன்
மன்னிப்பாயா? அப்போதேனும்
°°°°°°°°°
ஆபிரகாம் வேளாங்கண்ணி "கண்டம்பாக்கத்தான்" மும்பை