அவள் அழகு நினைப்பு

பெய் கின்ற மழை நின்றது, என்னை விட இவள் அழகு இவ்விடத்தை பசுமை ஆக்குகிறது என்று,
மனக்கின்ற பூக்களும் கோபம் பட்டது, உன் மணம் தன் மணத்தை விட மெய் சிலிர்க்க வைக்கிறது என்று,
வீசும் காற்றும் நின்று போனது, எங்கே தனது மென்மையான உரசலும் அவளை காயப் படுத்தி விடுமோ என்று,
சுட்டெரிக்கும் சூரியனும் தன் ஒலியை அனைத்துக் கொண்டது, உன் மேனியின் ஒலி தன்னை ‌‌‌‌‌விட ஒலியூற்றக் கூடியது என்று,
தோகை விரித்து ஆடும் மயில்கள் இறக்கத் துனிந்தது, இவள் தோகை இன்றி இவ்வளவு அழகோ என்று,
கண்ணில் உள்ள இமைகளுக்கு தோன்றியது, இவலை பார்க்கின்ற கண்ணை மூடச் சொல்ல கூடாது என்று,
கண் கருவிழிகள் கர்வப்பட்டது, இவளை இவனுக்கு காட்டும் கண்ணாடி நானென்று,
பேரழகி நிலவும் தன்னை மேகங்களளுக்குள் மறெத்துக் கொண்டது, இவள் இருக்க தான் எதற்க்கென்று,
இந்த அண்டம் தான் சுற்றுவதை மறந்து போனது, இவளை சுற்ற வேண்டும் என்ற நினைப்போடு,
நானும் என் கவிதை திறமையை இழந்தேன், உன்னை வருணிக்கும் வார்த்தைகளை தேடி அலைந்து.
- ஜெயபிரகாஷ்

எழுதியவர் : ஜெயபிரகாஷ் (29-Oct-18, 11:03 am)
சேர்த்தது : jayapragash
பார்வை : 371

மேலே