நானும் காதலித்தேன்
உருகி உருகி அழுகை சொரிந்து
நிசத்தை ஏற்க பார்க்கிறேன்,
கண்கள் இரண்டும்
தேனிக் குடம், கண்ணம்மா!
விலகி விலகி போன நொடிகள்
விலகிப் போக மறுக்குதே,
எண்ணம் எங்கும்
என்னைக் கொல்லும், கண்ணம்மா!
தேகம் எங்கும் நீ தந்த தீண்டல்
என் ஆண்மை தடுமாறும்!
என் காதல் சொல்லும் உன் பார்வை போதும்
அண்டம் சிரிதாகும்!
உன் நிழலை காணினும்
என் தேகம் சிலிற்குத்தே
என் உலகம் உரையுதே
ஓரு போரும் உடையுதே!!!