கடைக்கண் காட்டிவிடு
சுட்டுப்பொசுக்கும் வெயில்
கொட்டித்தீர்க்கும் மழை
உடல் கிழிக்கும் பனி
யாதொன்றும் தீண்டாமல்
வெட்டவெளியாய் இருக்கிறேன்
கடைக்கண்பார்வை மட்டும்
காட்டிவிடு போதும்
என் வாழ்வு பூஞ்சோலை
ஆகிவிடும் பெண்ணே.........
பின் நித்தம் உனக்காக
பூத்திருப்பேன்....... நீ
வரும் வழியெல்லாம்
சுகந்தமாய்ப் பரவி
உன் மூச்சில் கலந்திடுவேன்........