யார் கவிஞன்

யார் கவிஞன்
.........................
எழுதுகோல் எடுத்தவர்கள் /
எல்லோரும் எழுத்தாளன் இல்லை/
கவிநூல் தொகுத்தவர்கள்
எல்லோரும் கவிஞனும் இல்லை /

சிறு பிள்ளை தனமாக
கிறுக்குவது எல்லாம் /
இலக்கணக் கவிக்கு
ஒப்பானதும் இல்லை /
இருந்தும் இதை நான்
தப்பாகக் கூறவுமில்லை/

இலக்கணம் படித்ததில்லை/
தலைக்கனம் எனக்கு இல்லை
இவைகள் வைரமுத்துவின்
சிறு வரிகள்/
நானும் இலக்கணம் பயின்றதில்லை
அதனால் தானோ நான் அறியேன்/ தலைக்கனம் என்னை நெருங்கவில்லை/

திறமையான எழுத்தாளர்கள் /
எத்தனையோ பேர் எங்கங்கோ
ஒரு ஓரமாக இருந்து எழுதிக்
கொண்டு தான் இருக்கின்றார்கள்/

உண்மை நிலவரங்களை
கவிதையாக தொகுத்தபடியே /
ஒளி கொடுக்க தனக்கும் ஒரு வழி
பிறக்க வில்லையே என்று ஏக்கத்தோடு / அந்த ஏக்கத்தையும் கவிதையாகக் கொடுத்தவண்ணமே/

உயர்ந்த உள்ளமே இவர்களுக்குக்
கொடுங்கள் பிடி போல் ஒரு தடி /
உனக்கும் கிடைக்கும் வெற்றிப் படி/

இதை விடுத்து நல்ல பாம்பு
ஆடுகிறது என்று மண்புழுகும்
ஆடிச்சாம் என்னும் கதைபோல் /
கவிதை என்னும் பெயரில் சில சில்மிஷதண்மை கொண்ட
கிறுக்கல்களுக்குக் கவிஞர் பட்டமும்/
பணமும் வாரிக் கொடுப்பதால்/
மன நிறைவான. ஒரு நிலை
உனக்குக் கிட்டப்போவதில்லை

உணர்வுக் கவிஞர்கள் எல்லோரும் /
எட்டி நின்று புன்னகைக்கின்றார்கள்/
இந்தக் கவி பட்டத்தையும் கேலிக் கூத்தையும் கண்டு /
புரிந்து செயல் படுங்கள்
புகழ்ச்சி நாடி ஓடும் மண்டுகளா/

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (31-Oct-18, 7:38 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
Tanglish : yaar kavingan
பார்வை : 113

மேலே