ஏழையின் பட்டியல்

ஏழையின் பட்டியல்
**************************************

ஓட்டைக் குடிலது கொட்டும் நிலையும்
எட்டாச் செல்வமும் எட்டிய வறுமையும்
வாட்டும் பசியால் ஒட்டிய வயிறும்
கட்டும் ஆடையின் இற்ற நிலையும்
வட்டில் சோறு வடிக்கா கலனும்
கட்டில் படுக்கை கூடாத சோர்வும்
குட்டும் மனைவியும் கெட்டதன் பிள்ளையும்
அட்ட உறவும் கெட்ட சுற்றமும்
கிட்டிய ஏச்சும் கிட்டாத கருணையும்
பட்ட ஏழையை படுத்தும் பட்டியல் !!

எழுதியவர் : சக்கரைவாசன் (31-Oct-18, 7:13 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 111

மேலே