தமிழ் பச்சை இல்லை

என்னங்க உங்க தங்கச்சி கொழந்தைக்கு நாளைக்கு பெயர் சூட்டுவிழா. உங்க தங்கச்சி தாய் மாமனான நீங்கதான் அவ கொழந்தைக்கு பேரு வைக்கணும் சொல்லிட்டா. நல்ல இந்திப் பேரா இருக்கணுமாம். தமிழ்ப் பேரு வச்சா தமிழாசிரியர்களே கிண்டல் பண்ணறாங்களாம்.

நானும் அதப்பத்தித்தான் நெனச்சிட்டு இருக்கிறேன் மங்கை. தங்கை பேரு முல்லை. மாப்பிள்ள பேரு தில்லை. அதனால ரண்டு பேரையும் சேத்து 'தில்முல்' -னு பேரு வச்சிருலாமா மங்கை?

அது சரிப்படாதுங்க. அப்பறம் பையன எல்லாரும் 'தில்லுமுல்லு'னு கூப்புடுவாங்க

சரி நீயே ஒரு பேரச் சொல்லு மங்கை.

உங்களுக்கே தெரியும் நான் இயற்கையை நேசிக்கிறது. உலகமெங்கும் பசுமையாக வேணுங்கறது என்னோட கனவு. அதனால பையனுக்கு 'பச்சை'-னு பேரு வச்சிருலாங்க.

'பச்சை'ங்கறது தமிழ்ப் பேராச்சே.

நான் தமிழ், ஆங்கிலம், இந்தி - இந்த மூணு மொழிகளிலயும் முதுகலைப் பட்டம் வாங்கினவங்கற மறந்திட்டீங்களா. நான் சொல்லற 'பச்சை' தமிழ்ப் 'பச்சை' இல்லங்க.
நான் சொல்லற 'பச்சை' இந்திப் 'பச்சை'ங்க.

இந்திப் பச்சையா? அதுக்கு என்ன அர்த்தம்?

அதை நான் இப்பச் சொல்லமாட்டேன். நீங்க பேரு வச்ச ஒடனே சொல்லுவேன். நீங்க பேரச் சொல்லற போதே அந்தப் பேரு தமிழ்ப் 'பச்சை' இல்ல. இந்திப் 'பச்சை' -ன்னு சத்தமா தெளிவாச் சொல்லிடுங்க. இல்லன்னா நீங்க கொழந்தைக்கு தமிழ்ப் பேர வச்சிட்டீங்கனு கோவிச்சுக்குவாங்க.

சரி மங்கை. நீ சொல்லற மாதிரியே செய்யறேன்.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Pachai = youthful, resourceful

எழுதியவர் : மலர் (3-Nov-18, 3:17 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : pachchai
பார்வை : 114

சிறந்த நகைச்சுவைகள்

மேலே