பள்ளிக்கூடம்
ஒற்றை வழிப்பாதை ஒரு மாட்டு வண்டியின் பின்புறம் தொங்கிக்கொண்டே செல்கின்றேன்
ஒருபுறம் புத்தக பை மறுபுறம் புன்னகை பை
விலை மதிப்பில்லா சிரிப்புடன் என்னை நோக்கி என் ஆசிரியரின் புன்னகை
என் இதயத்தை உரசியது அதை சொல்ல மொழிகல் இல்லை
உருவத்தில் பயமூட்டுவார் உதட்டில் இருந்து வார்த்தைகளால் பாசம் காட்டுவார்
வகுப்பறை அன்று எனக்கு சிறைச்சாலையாக தெரிந்தது
இன்று என்னை சிறப்பித்த மாளிகையாக உணர்ந்தேன்
அதனால்தான் நானும் உயர்ந்தேன்
நீ வெறும் கட்டிடம் இல்லை
உன்னை நான் கற்பித்த இடம்
உனக்கு பேசத்தெரியாது உன்னால் நான் பேசப்பட்டேன் புகழ்ச்சியின் உச்சியில்
மயிலிறகை எடுத்து புத்தகத்தில் மடித்து அதன் குட்டியை தேடிய
நாட்கள் இனி கிட்டுமோ ?
பாசங்கள் நேசங்களை தேடித்தந்தாய்
பகுத்தறிவையும் படிப்பியலையும் பகிர்ந்து தந்தாய்
பள்ளிக்கூடம் என்பது மழைக்கு ஒதுங்குவது இல்லை
கலைக்கு ஒதுங்குவது என்று உணரவைத்தாய்
படிப்பென்பது ஒரு உணர்வு
அதில் நீ மட்டுமே உயிர் என்பதை நான் உணர்ந்துகொண்டேன்
அன்று அந்த நான்கு சுவற்றுக்குள் என்னால் இருக்க முடியவில்லை
இன்று மீண்டும் அந்த நாட்கள் கிடைக்குமா என்ற ஏங்காத நாட்கள் இல்லை
என் வாழ்க்கை பாடங்களை படிக்கும்போதுதான் தெரிகிறது
பள்ளி பாடம் எவ்வளவு இனிமை என்று
ஒரு நாள் என் பள்ளிக்குள் நுழைவதுபோல் ஒரு கனவு
தட புட என பள்ளிக்குள் நுழைந்தேன்
தலையை தட்டிய நிலைவாசல் இது உன் பழைய பள்ளி குனிந்து வா நீ வளர்ந்துவிட்டாய் என்றது
கரும்பலகை கேட்டது அடேய் மடையா
உன் பள்ளி பருவத்தில் நான் உன் வார்த்தைகளை சுமந்தேன்
இன்று என்னால் உன் வாழ்க்கையை சுமக்க முடியாது என்று சொன்னது
நான் அதிகாரமாய் அமர்ந்திருந்த இடங்கள் எல்லாம்
என்னை ஏதோ ஒன்று கேட்க்குது
மீண்டும் கிடைக்காத கருவறை
அது என் பள்ளியின் வகுப்பறை
ஒரு நாள் கொடுங்கள்
ஓரிரு மணித்துளிகளில் எங்கிருந்தாலும் ஓடி வருகிறேன்
மீண்டும் என் பள்ளியில் படிப்பதற்கு