எங்கள் கல்லூரி
காலங்கள் மறக்கடித்த
பின்னொரு நாளில்
எங்கள் பழைய கல்லூரியை
எட்டி பார்த்த போது.....
எதுவும் மாறாத கட்டிடம்
வழித்தடங்கள் கரும்பலகை
இருக்கைகளோடு
இளமை மாறாத எங்கள்
நிழல் உருவங்கள்
ஆடியும் பாடியும்
மகிழ்ந்தும் வெகுண்டும்
கொண்டிருந்தன!