நினைவுகள் போதுமா என் தோழா

என்னத்த சொல்ல!
நின்றது உன் இதயம் மட்டும் அல்ல
எங்கள் எல்லோரின் இதயமும் தான்
உன் அன்பின் நினைவுகளால்
எங்கள் நெஞ்சம் கணக்கிறது
கனத்த இதயமும்
கணம் கணம் கண்ணீரில்
சுமையை இறக்கிறது
எப்பொருளும் முற்று பெற
காலாவதியே!
உன் வாழ்வு முற்று பெற
கால விதியே!
என்றும் என் நினைவுகளில்
உன்னை வாழ வைக்கும்
உன் நண்பன்!