மணிவிழா நல்ல மணவிழா
மணிவிழா- 07-நவம்பர்-2018
மணிவிழா.. அது
இரு மனங்களின் அன்பைக்
கொண்டாடும் மணவிழா...
திரு. திருமலை &
திருமதி. சங்கரி
இனிய மணிவிழா
நல் வாழ்த்துக்கள்...
வாழ்ந்திருந்த காலத்தின்
வசந்தமும் சுகந்தமும்
இன்றும் என்றும்
சுகம் சேர்க்கட்டும்...
அமைதியான அழகான
அமாவாசை நாளிது...
என்றும் வளர்பிறைதான்
இனி உங்களுக்கு...
தென்றல் இன்னும்
இதமாய் வீச உங்களிடம்
கற்றுக் கொள்ளும்...
மலர்கள் வாசம் தேடி
உங்களை நாடும்...
நிலா தன்னைச்
சுய பரிசோதனை
செய்து கொள்ளும்
ஒருவொருக்கொருவர் காட்டும்
காதலின் குளுமையில்...
மற்றவர் ஆசீர்வதிக்க
மாலை மாற்றிக்கொண்டது
திருமணத்தன்று...
மற்றவரையும் ஆசீர்வதிக்க
மாலை மாற்றிக்கொள்வது
இனிய அறுபது காணும்
மணிவிழா இன்று...
வயது மிகச் சிறிதாய்
முதிர்ந்து விடலாம் உடலுக்கு...
இன்னும் இனிக்கும்
இளமைதான் மனதுக்கு...
எல்லா வளங்களும் உங்களுக்கு..
எண்பதும் நூறும் உங்களுக்கு...
தலைமுறைகள் வாழ்த்தட்டும்...
தலைமுறைகள் செழிக்கட்டும்...
சொன்னதெல்லாம்
இனிய வார்த்தைகள்...
இன்னும் நிறைய உண்டு
இங்கு நல்ல வார்த்தைகள்...
அத்தனையும் சேர்த்து
திருமலை சங்கரி
மணிவிழா ஜோடிக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
👍👏🙏🌹🍰🎂😀💑