தீபாவளி அது உலகமயமானது
******** தீபாவளி ********
வேஷ்டிகள் முழுக்கால்
சட்டை ஆகி நாளாச்சு...
தலையில் குடுமி மாறி
காலங்கள் நிறைய ஆச்சு...
பழக்கவழக்கங்கள் பல
இன்று மாறிப்போச்சு...
தீபாவளித் திருவிழா
சற்றும் மாறிடவில்லை
தன் வேர்களை
அமெரிக்க வெள்ளை
மாளிகை வரை பரப்பத்
தவறிடவில்லை...
நம்மில் தோன்றும்
அறியாமை.. தீமைகள்
பேதைமை குணங்கள்
நம்மாலேயே அழியட்டும்...
பூமாதேவியால் நரகாசுரன்
அழிந்தது போல்...
பட்டாசுகள் இதை
பறைசாற்றட்டும்...
தீபாவளி தமிழ்மயமானது...
எங்கள் வீட்டு முறுக்கு சீடை
அதிரசம் வடை இதை
அழகாய்ச் சொல்கிறது...
அது இந்தியமயமானது
மைசூர்பாகு மகிழ்வாய்ச் சொல்கிறது...
உலகமயமானதும் கூட
குலோப்ஜாமுன் குதூகலமாய்ச் சொல்கிறது...
தீபாவளி...
அதே ஊர்... தெரு.. வீடு..
இருந்தும் இன்று எல்லாம்
புதிதாய்த் தோன்றுகிறது...
அங்கிங்கு என்றில்லாமல்
எங்கெங்கிலும் சந்தோசம்..
உற்சாகம் தவழ்கிறது..
புத்தாடைகளின் பளபளப்பில்
காண்போரெல்லாம் கண்ணுக்கழகாய்...
மனித முகங்களின்
பிரகாசத்தில் இன்று
திசைகள் எல்லாம்
கிழக்காய்த் தெரிகிறது...
தீபாவளியின் தீப ஒளியில்
எல்லாம் ஒளிமயம்...
தீபாவளி நாளிதில்
விடுமுறை உற்சாகத்தில்
வருஷம் ஒன்று தனக்குத்
தேவையான சக்தியை
எடுத்துக் கொள்கிறது...
தீபாவளி என்றாலே
தெருவெல்லாம் பட்டாசு
மனசுக்குள்ளும் மத்தாப்பு...
அனைவருக்கும் இனிய
தீபாவளி வாழ்த்துக்கள்...
அன்புடன்..
ஆர்.சுந்தரராஜன்
😀👍🌹🙏🙋🏻♂🌷🌺🍰🎂🕺🏼