எழுத்து த் தள நண்பர்களே
" எழுத்து " த் தள நண்பர்களே
**********************************************
பாசத்தைப் பகிர்ந்தெழுத பார்வையிட ஒருவரிலை
நேசத்தை எழுதியிட தேர்வுஇடும் நபருமில்லை
வேசமதை வெளிச்சமாக்க கருத்துரை ஏதுமிலை
கிராமத்தை வெளிக்காட்ட அதைநுகரும் மனிதரில்லை
இயற்கையின் அழகை ஆழமாய்ப் பகிர்ந்திட
வாழ்க்கைப் பாதையை சீராக வடிவமைக்க
புனைந்த பதிவுகள் பாராட்ட எவருமில்லை
காதலுக்கும் கவர்ச்சிக்கும் பார்வைகள் பல்லாயிரம் !
(இது எனது தனிப்பட்ட மனவெளிப்பாடு . யாரையும் புண்படுத்தும் புனைவு அல்ல )