பல்கலைக்கழகம்

நண்பன் பிரேம் ஆனந்த் சுரேந்திரன்...
நேசம் ஆனந்தம் இரண்டையும்
பெயரிலும் சுமப்பவன்...

மனித நேயம் பிரேமின்
மாண்பு மிகு சொத்து...
இனிய குணநலனும் சேர்த்து...

சாயர்புரம் பிறந்து
சாயா அறம் கொண்டவன்...
அல்லவை சாரா இயல்புடையவன்...
பொறியியலோடு சட்டம் படித்தவன்..
மாநகர வளர்ச்சி குழுமத்தில்
சட்ட அதிகாரி ஆனவன்..

முனைவர் பட்டம்
பெறப் போகிறான்...
மென்மேலும் உயரப் போகிறான்...
விரைவில் அதனை நம்மிடம்
பகிரப் போகிறான்...

பிரேம் ஆனந்த்..
உள்ளத்தாலும் உயரமானவன்...
உயர்ந்த தளத்தில்
உயர் பதவி வகிப்பவன்..
இருந்தும் தரைத்தளம் தொட்டுதான்
ஏற வேண்டும் இறங்க வேண்டும்
என்பது போல் தன்னியல்பு
மாறா சமதள மனத்தினன்...

கிராமத்துப் பள்ளிகளில்
பாடம் பயின்று
தலைநகர் சென்னை மாநகர்
வளர்ச்சிக் குழுமத்தில்
உயர்ந்த பதவி...
பிரேம் ஐ எண்ணி பெருமை
கொள்கிறது சாயர்புரம்...

பொறியியலும் சட்டமும் படித்தான்..
வரலாறு கற்று வங்கியில்
பணிபுரியும் மனையாள் கரம்பிடித்தான்...
இவர்களின் இனிய மகள்கள்
ஸ்வேதா அமெரிக்காவில்
கணினிப் பொறியியல்..
பீணா இந்தியாவில்
ஆங்கில மொழியியல்...
இனிதே கற்கின்றனர்...
இவர்கள் நால்வரும்
பல்கலைக்கழகம் ஒன்றை
வீட்டிலேயே கட்டுகின்றனர்...

இருபத்து நான்கு ஆண்டுகள்
நிறைவில் தனக்கென்று
வாழ்வது கொஞ்சம் துணைக்கென்று
வாழும் நெஞ்சம் என
வாழும் உதாரண தம்பதி
நண்பன் பிரேம் திருமதி சுமதி
ஆகியோருக்கு அன்பான
திருமண நாள் வாழ்த்துக்கள்...

வாழ்க பல்லாண்டு...
வளங்கள் பல பெற்று...
மனம் போல் வாழ்வு...
எண்ணம்போல் உயர்வு என்பதற்கு
உதாரணமாய் இருக்கிறாய்..
பிரம்மாண்டமாய்த் தெரிகிறாய்
பிரேம் ஆனந்த் நீ...

மனைவி அமைவதில் மட்டுமல்ல
மகள்கள் அமைந்ததிலும்
இறைவன் கொடுத்த வரம்
பிரேம் உனக்கு உண்டு...
அது எப்போதும் உண்டு...

வசந்த வாழ்த்துக்களுடன்..
நண்பன் இரா.சுந்தரராஜன்.
👍👏🙋🏻‍♂🙏🎂🍰🌹😀

எழுதியவர் : சுந்தரராஜன் ராஜகோபால் (31-Oct-18, 2:05 pm)
சேர்த்தது : இரா சுந்தரராஜன்
பார்வை : 371

மேலே