எனக்குள் அவன்
அன்றும் என்றும்....
அன்று முதல் இன்று வரை
எனக்குள் அவன்...
காலங்கள் பாதி சென்ற பின்பும் எனக்குள் அவன்...
தேடி எங்கும் அலைந்தது இல்லை
தெருவெங்கும் கண்டதும் இல்லை
இருந்தும் எனக்குள் அவன்...
காத்திருக்க வைத்து விட்டு
பார்வை தாண்டி சென்ற பின்பும் எனக்குள் அவன்...
எந்தன் நிஜங்கள் களவாடி நினைவுகளை தந்த பின்பும் எனக்குள் அவன்....
காயங்கள் தந்து விட்டு
காரணங்கள் சொல்லி
சென்ற பின்பும்
எனக்குள் அவன்...
அன்றும்
இன்றும்
என்றும்....
எனக்குள் அவன்.....