செம்பஞ்சுப் பாதங்கள்

செம்பஞ்சுப் பாதங்கள்
***************************************************
செம்பஞ்சுப் பாதங்கள் புண்பட்டு
நோகாது மஞ்சளிட்டு அர்ச்சனையோ
கும்பிட்டு தொழுதாலும் குலவையிட்டு
அழைத்தாலும் ஓடிவரும் சக்தியவளே
வம்புகள் வந்தாலும் வாதுகள்
நேர்ந்தாலும் கைகொடுக்கும் கருணைநீயே
கொம்பசைக்கும் மாடேறி பாம்பணிந்தோன்
உடனிருந்து காட்சியிடும் பெண்மயிலே --உன்னை
நம்பி வந்தோர்க்கு காட்சிதரக்
கூடாதோ கயிலாயக் காட்சியாக !!

எழுதியவர் : சக்கரைவாசன் (25-Nov-18, 2:24 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 37

மேலே