காப்பிட்ட கைகளில்

காப்பிட்ட கைகளில்
**************************************
பூப்போட்ட சேலையில் உன்னழகைக்
காண்கையிலே பட்டொளி அதுவீசுதே
அப்பிட்ட மஞ்சளுக்கு அருவரம்
இட்டாயோ உன்முகம் ஏறுதற்கே
காப்பிட்ட கைகளில் கல்வளையல்
அளித்திடும் சல்சல் எனும் ஒலியோடு
கூப்பிட்ட குரலுக்கு அதுகேட்டு
ஓடிவரும் பரமனின் இடபாகமே
எப்போதும் உனைச்சுற்றும் பெண்டிர்க்கு
"கரு " ஈய்ந்து ஆனந்த அருள்புரிவாய் !

எழுதியவர் : சக்கரைவாசன் (25-Nov-18, 2:55 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 27

மேலே