மஞ்சளிட்ட உன் கன்னம்

மஞ்சளிட்ட உன் கன்னம்
************************************************
கஞ்சமின்றித் தேனமுதை வண்டுக்காய்
மலர்தன்னில் வைத்திட்ட தாயவளே !
மஞ்சளிட்ட உன்கன்னம் அருகிருந்து
நோக்கையிலே சேலத்து மாங்கனியோ !
விஞ்சிடும் மதிலார்ந்த ஆனைக்கா
நகர்தன்னில் தவமுற்ற ஈஸ்வரிநீ!
அஞ்செழுத்தான் கண்டத்து விடமேற
அதை அட்ட அருமருந்து ஆனவளே!
பஞ்சமிலா நல்வாழ்வு புவியோர்க்கு
கிடைத்திட கருணைமழை பொழிந்திடுவாய் !!

எழுதியவர் : சக்கரைவாசன் (25-Nov-18, 3:11 pm)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 44

மேலே