நீ பாதி நான் மீதி

விதையாய் மனதில்
விழுந்தாய் உயிரே
உடனே மரமாய்
வளர்ந்தாய் அழகே …!

விழியன் ஒளிவீச்சு
கதிரின் கதிர்வீச்சு
நினைவில் படர்ந்தோட
நிழலெல்லாம் உன்னுருவம்...!

நான் மீனின் வாயில்
மாட்டிக்கொண்ட
தூண்டில் முள்ளாய் ஆனேன் …!

என் மனமிங்கு பூக்கள் தேடும்
வண்டாக தினமும்...
இன்று ஒரு பூவில் சிறகுகள் புதைந்தது
பூவே உன் மனமோ...!

இமையாலே சாமரம் நீ வீசினாய்
இதயத்தின் முகவரி உனதாக்கினாய்

உனை பெண்பார்க்க நானும் வந்தானே
உன்னிதழ் திறப்பில் நானும் பூத்தேனே..

உன்னிதழ்கள் இறுகிப் போகும் போதும்
தெளியா திந்த மயக்கம்...!


நீ தரைமீது எந்தன் முகத்தை
அழகாகத் தேட…
உன் சிகைமீது உந்தன் முகத்தை
மெதுவாய் நான் தேட..

துளிநேர பார்வை பிழி போதையே
விழியல்ல இரண்டும் உளி முனையே

இறைவனெனும் ஆதியதில்
அடி பெண் பாதி ஆண் மீதி

இதை உணர்ந்து கொண்டேன்
நானும் இன்று
ஆன் மீக வாதி...!

குறிப்பு: தெகிடி என்ற திரைப்படத்தில் வரும் "விண்மீன் விதையில்" என்ற பாடலின் மீட்டிற்கு எழுதிய வரிகள்..

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (26-Nov-18, 12:36 pm)
பார்வை : 456

மேலே