என்ன மாயம் நீ செய்தாய்
பிறை நுதலில் உன் கேசம்
தென்றல் வீசும் சாமரமாய்..
வானவில் புருவத்தோடு உன்
பார்வை எய்த கணையாய்..
மறைத்தாலும் தெரியுமுன்
இதழ்கள் தேன் சுனையாய்..
மௌனித்தாலும் விழிகள் பேசும்
விடிய விடிய கதையாய்..
இப்படியெல்லாம் நானெழுத
என்ன மாயம் நீ செய்தாய் ??