கஜா புயலில் உதவிய நண்பர்களுக்கு

கஜா புயலில் உதவிய நண்பர்களுக்கு
குரங்கு கையின் பூமாலையாய்
குதறப்பட்ட குடிசைகள்

மனிதனை அடக்கும்போது
வேடிக்கை பார்த்த விலங்குகள்
அடக்கப்பட்டன பாதாள குழிகளில்

குழந்தை சப்பியெறிந்த
குச்சிமிட்டாயாய் தென்னைமரங்கள்
தொடர்ந்து அமாவாசையாய் இரவுகள்
கவள கஞ்சியின்றி
குவலயம் துறந்த உயிர்கள்

இரப்பை முழுதும்
இல்லாமை சமைத்த உணவு
களைப்பு கட்டிலில்
துயில் கொள்ளும் மானிடம்

நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால்
வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்
போல்
நல்லோர்உள்ளங்கள் சில
ஒளியில்லாப்பாதையில்
வழி தடவி வந்தது
ஊசலாடும் உயிர்களுக்கு
உணவுதர
அன்பின் உயிர் நிலை அங்கே
நிறைந்த வெள்ளத்தை
உதவி கரத்தால் அள்ளிப்பருகி
வற்றி தீர்த்தது
மாடுகட்டி போரடித்தால்
மாளாது செந்நெல்
ஆணை கட்டி போரடித்த
சேனை குல அடுப்பிற்குள்
பூனைகள் உறங்குவது
விதியின் பானையில் வேகாத
பருக்கையடா
கஜாவின் கைவரிசையடா

எழுதியவர் : இளவல் (26-Nov-18, 3:49 pm)
சேர்த்தது : இளவல்
பார்வை : 74

மேலே