அவள் பார்வை
என்மீது வீசும் உன் பார்வை
ஓராயிரம் பார்வையிலும் தனிப் பார்வை
என்மீது உன் மனது இளகி நீ
என்னை ஏற்கிறேன் என்று உந்தன்
கண்கள் பேச அதை சுமந்துவந்து
தென்றலாய் இழைந்து வந்து
என் மீது பட்ட
இங்கிதம் பொங்க வரும்
எழில்மிகு பார்வை என் மனதில்
காதல் நிலவொளி பரப்பும்
தன்னொளிப் பார்வையடி கண்ணம்மா .