உன்னை அறிந்திடு

தன்னை உணர்ந்தால்
விண்ணையும் ஆளலாம்

சுயமதிப்பீடு செய்
சுற்றும் பூமியின்
வேகம் கவனி

ஆரவாரம் கொள்ளாதே
அமைதி காத்திடு

மற்றவர்களிடம் இருந்து
உன்னை வேறுபடுத்து
உனக்கான வழியை தேர்ந்தெடு

பொறுப்புகளை வரையறு
கடமைகளை நிறைவேற்று

நல் காாியம் புாிந்திடு
மற்றவர்களுக்கு உதவிடு

மாற்றங்களை உள்வாங்கு
ஏமாற்றங்களில் படித்திடு

பாராட்டுகளைக் குவித்திடு
நல் பண்புகளை வளர்த்திடு
புகழோடு வாழ்ந்திடு
வினைப் பதிவுகளை விலக்கு

ஆற்றலை உற்பத்தி செய்
மாற்றங்களை உருவாக்கு
உன் உழைப்பில் வாழ்ந்திடு
உன்னை அறிந்திடு
விண்ணை அளந்திடு

நேர்மறை சிந்தனை வளர்த்திடு
விரும்பி வாழ்ந்திடு
விதையுள்ள நெல்லாய்

ஆன்மாவை பிரகாசமாக்கு
அணுவுக்குள் அடக்கமாகிடு

எழுதியவர் : முராநி (28-Nov-18, 5:23 pm)
சேர்த்தது : MuRaNi
பார்வை : 746

மேலே