முரண்

ஆசையே அழிவுக்கு
காரணம்

அத்தனைக்கும்
ஆசைப்படு

முரண்

மண்ணாசை அழித்தது

பெண்ணாசை அழித்தது

பொன்னாசை அழித்தது

இது அத்தனையும்
படித்தது

புரிந்தது ஆசையே
அழிவுக்கு காரணமென்று

ஓசையின்றி வளர்ந்த
ஆசை

உலகை கைக்குள்
திணித்தது

ஆசைப்பட்டது கிடைத்தது

அடிமைவாழ்வு தகர்ந்தது

முரணும் அரணாகிப்
போனது

அத்தனைக்கும்
ஆசைப்பட்டதால்!

எழுதியவர் : நா.சேகர் (9-Dec-18, 5:11 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 399

சிறந்த கவிதைகள்

மேலே