கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
நம்பிக்கை எனும் நட்சத்திரம்
தேவதூதர்க்கு நல்வழி காட்டிட
நம் பாவத்தையெல்லாம் போக்க வந்த
பாலகன் பிறந்த இந்நாள்......
திரும்பிய திசையெல்லாம்
விடிவெள்ளியின் தீப ஒளிவெள்ளம்
உலகமெங்கும் திகட்டாத இன்பத் திருநாள்
கிறிஸ்து பிறந்த இந்நாள்......
இறக்கின்ற வேளையில் கூட
இறைவனிடம் பிறர்க்காக
இரக்கம் காட்டும் எங்கள் பிதாவேயென
இறைஞ்சிட்ட இரட்சகர் பிறந்த இந்நாளில்....
உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி மலையென வளர்ந்திட
மனமுருகி வாழ்த்துகின்றேன்.