மௌன நிகழ்வுகள்
காய்ந்த சருகாய்
மனம்
அதில் ஓடும்
கோடுகளாய்
உன் நினைவு
காற்றின் முயற்சி
மீண்டும்
துளிர வைக்க
மனசுக்குள் மௌன
சிரிப்போடு
நீரோட்டதோடே என்
பயணம்
காற்றுக்கு கையசைத்த
படி
முயற்சியில் தோற்று
எனை
கரை ஒதுக்க
மௌனமாய் வரவேற்ற
மண் அரிக்க
அந்த அரிப்பை
கூட
வெற்றிக் கொள்ளும்
சருகின்
நரம்பாய் உன்
நினைவுகள்
மௌன நிகழ்வுகள்
வாழ்க காதல்..,