வானவில் போல்வரிகள்

பவழமல் லிக்காம்பு போலச் சிவந்த
தவழும் இதழ்களில் முல்லை சிரிக்கும்
அவள்வரு கைக்காக காத்திருக்கும் மேற்கே
பவழக் கதிர்விரியும் அந்திமா லைப்பொழுது !
அந்தவெழில் அஸ்தமன வேளையில் ஏழுநிற
வானவில் போல்வரிகள் எண்ணிக்கை இன்றி
உதயமாகு தேஎன்னுள் ளே !

----பல விகற்ப பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (15-Dec-18, 10:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 45

மேலே