அவள் அழகைவிட அழகு - தமிழ் அவளைவிட அழகு

அவள் அழகை விட அழகு
அவளிடம் நான் பார்த்த அழகு
அவள் சூடிய நாணம் அல்லவே
அவள் சிந்தும் சிரிப்பும் அல்லவே
அவள் சுடர் விழி பார்வை அல்லவே
அவள் நேர் வகுட்டு குழலும் அல்லவே
அவள் துகிலுரித்த மேனியும் அல்லவே
யான் கண்ட அழகோ
அவள் நெஞ்சத்தின் நேர்மை தனிலே
அவள் நிமிர்ந்த நன்நடையிலே
அவள் பெண்ணென்று கொண்ட திமிறிலே
அவள் தொடுத்த அற வழியிலே
அவள் வாய் பேச்சு மொழியிலே
அவள் நான் கண்ட அழகிலும் அழகே !!!
கண்டதும் கேட்டதும் யாவையும் விட
வளைந்தும் நெளிந்தும்
நீட்டியும் முழக்கியும்
குறிப்பாலும் கூர்மையாலும்
உணர்தியும் குழப்பியும்
கவித்தன்மையோடும் காதலோடும்
வீரத்தோடும் பெருமையோடும்
அவள் பேசும் தமிழ்
அவள் கொஞ்சும் தமிழ்
வாடை காற்றில் தூது விட்ட
அவள் காவிய தமிழ்
திருவாய் மலர்ந்து வரும்போல்
அவை சுட்டுகிறது
தமிழ் அவளை விட அழகே !!!

எழுதியவர் : மனோன்மணி (19-Dec-18, 4:26 pm)
சேர்த்தது : Chithra
பார்வை : 115

மேலே