கிச்சு கிச்சு

கிச்சு கிச்சு

==============================================ருத்ரா



காதலோடு கட்டிப்புரண்டு விளையாடுவது

முதலைக்குட்டியோடு விளையாடுவதைப்போல் தான்.

குட்டியாய் இருந்தாலும்

இரட்டை இமைகளில் இரட்டைக்கண்ணீர் விளையாட்டுகள்.

அன்று எனக்கு மட்டும்

புரிகிற மாதிரி சிரித்தாளே என்று

என்று

தழுவ கைகள் நீட்டினேன்.

ஆனால் அந்தக்குட்டி கோரத்துடன் தாக்கி

வாய் பிளந்து

என் கனவுகளை அரைத்துத்தின்றது

சீற்றத்துடன்.

அச்சம் நாணம் மடம் பயிர்ப்பு
என்றால்

அந்த முதலைக்குட்டி த்தோலில்
முள்ளு முள்ளாய் குமிழி பூத்து
அழகாய் இருக்குமே
அந்த கவசம்

என்னைத் துவம்சம் செய்து விட்டது.


கூழாகிக்கிடக்கும் நான்

மீண்டும் என் உரு பிடித்து

அவள் மனத்தில் கரு பிடிக்கவேண்டும்.

அது வரை

இந்த மயில் பீலியைக்கொண்டு

அவளுக்கு

(எனக்கும் தான்)

கிச்சு கிச்சு மூட்டிக்கொண்டிருப்பேன்.



===========================================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (24-Dec-18, 6:52 am)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : kichu kichu
பார்வை : 211

மேலே