ரத யாத்திரை

பாட்டிம்மா நீங்க ஆசைப்பட்டு இதுவரைக்கும் எதையும் கேட்டதில்லை. எதுவா இருந்தாலும் சொல்லுங்க. நான் உங்க ஆசையை நிறைவேத்தி வைக்கிறேன்.
@@@@
எங் கடைசி ஆசை இது. நாஞ் சாகறதுக்குள்ள ஆயிரம் வருசத்துக்கு முன்னாடி நம்ம மன்னர்கள் கட்டிய கோயிலுக்கெல்லாம் ரத யாத்திரை போகணும்.
@@@@
இது பெரிய விசயமே இல்லங்க பாட்டிம்மா. நீங்க இந்தோனீசியவில இருக்கிற முருகன் கோயிலுக்கே போறதுன்னாக்கூட நான் ஏற்பாடு பண்ணறேன். நம்ம வேனை ரதம் மாதிரி சோடிச்சிட்டாப் போச்சு. உங்க ரத யாத்திரையை வெள்ளிக்கிழமையே துவக்கிடலாம்.
@@@@
ஏன்டா பேரப் பையா, நான் என்னடா அரசியல்வாதியா? ரதம் மாதிரி சோடிச்ச வண்டில புனித பயணம் போறதுக்கு. நான் வாக்கு வாங்க போகலீடா. உலகம் நல்லா இருக்கணும் வேண்டிக்க ரத யாத்திரை போகணும்டா. எனக்கு நம்ம மன்னர் காலத்து ரதம் வேணும்டா.
@@@@
நமக்கு இருக்கிற சொத்துக்கு ஆயிரம் ரதம்கூடச் செய்யலாம். இருந்தாலும் ஒரு பத்து நாளு அவகாசம் குடுங்க.
@@@
நீ என்ன பண்ணுவயோ எனக்குத் தெரியாது. தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு பொறக்குது. அன்னிக்கு என் ரதத்தை ரண்டு குதிரைகள் இழுத்துட்டு போகணும்.
#@#@
நீங்க சொன்ன தட்டவா முடியும்?
தயார் பண்ணறேன்..
@@@@
எம் பேரன்னா பேரன்டா பொன்னையா.