இயேசு பாலன்

#இயேசு பாலன்

சூசையப்பர் மரியாளின்
ஆசைகொண்ட மகனாம் - நம்
இயேசுபாலன் அவனாம் - மாட்டுக்
கொட்டிலில் உதித்தவனாம் - அவனைத்
தொழுவோரின் துன்பங்களை
மெழுகாய் கரைப்பானாம்..!

எரோதரசன் ஆணையிட்டான்
ஏசுசிசு கொல்ல - கொலை
வெறியையென்ன சொல்ல -அந்த
சதியை தானே வெல்ல - கனவில்
தேவதூதன் சேதி சொன்னான்
சூசை யப்பரிடம் மெல்ல..!

தேவாதி தேவருக்கு
இல்லையன்றோ மரணம் - சதி
அடித்ததுபார் கரணம் - ஏசு
நாடுவிட்டு பயணம் - அவரை
சிலுவையிலே அறைந்தாலும்
மீண்டும் ஓர் ஜனனம்..!

தத்துவத்தின் ஞானத்திலே
சிறந்திருந்தார் ஏசு - அவர்
இறைவனின்வா ரிசு - நாதர்
புகழை புவியில் பேசு - அவரைத்
தொழுபவரின் துன்பமெல்லாம்
ஆகி விடும் தூசு..!

#சொ.சாந்தி

எழுதியவர் : சொ.சாந்தி (25-Dec-18, 4:46 pm)
சேர்த்தது : C. SHANTHI
பார்வை : 304

மேலே