இறகு
எங்கிருந்தோ!
ஒரு இறகு காற்றில் மிதந்து,
அச்சிறுவனை நோக்கி பறந்து வந்தது;
அதை கீழே விழ விடாமல்,
தன் மூச்சு காற்றால் பறக்க வைத்தபடியே!
வீட்டிற்கு வந்த சிறுவன்;
அந்த இறகை நெஞ்சோடு அணைத்து கொண்டு
அழ தொடங்கினான்
தான் ஆசையாய் வளர்த்த கோழியை சாமிக்கு பலி இட்டதை பார்த்து...